மதியை மயக்கும் மாருதியே

2. மதியை மயக்கும் மாருதியே  ராகம்: ரஞ்சனி  தாளம்: ஆதி

 

மதியை மயக்கும் மாருதியே

உன்னை மனதார நினைத்தால் நற்கதியே

 

மைதிலி மணாளன் தூதனாகச் சென்றாய்

அவள் தன் அருளாலே ராம தாசனென மாறினாய்

 

கதிரவனை பழமென எண்ணி உகந்தாய்

அஞ்சனை மைந்தனாக அதை பறிக்க முயன்றாய்

தாடையில் அடி வாங்கி ஹனுமன் ஆனாய்

பரப்ரஹ்மத்தை அறியும் அரிய வரமும் பெற்றாய்

 

ராமனை நினைந்து ஸதா கரங்களைக் குவிப்பாய்

அந்த ரகுவரனின் நாமம் கேட்டால் கண்ணீர் உகுப்பாய்

வாயு புத்திரனே உன் அருள் எமக்கீந்து

ஶ்ரீ ராம ஸாம்ராஜ்யம் பெற்றுத் தருவாய்

Advertisements