காதல் வளர்ப்போம், மௌனம் கொண்டு

காதல் வளர்ப்போம், மௌனம் கொண்டு

“மௌனமாகப் பேசு,” என்றான் அவன்

“அது எப்படி முடியும்?” கேட்டேன் நான்

என்னைக் கூர்ந்து பார்த்துச் சிரித்தான் அவன்

‘ஓ, கண்கள் உள்ளனவே,’ எனச் சொல்ல யத்தனித்த நான்

சட்டென வாய் மூடி, கண் திறந்தேன்—அவனை நோக்கி அழகாய்ச் சிமிட்ட

மௌனம் அங்கு ஆழமாகப் பேச ஆரம்பித்தது…

காதல் மொழி ஊமைகளுக்கும் சொந்தம் அல்லவா?