கண்ணன் பாட்டு (a Tamil song on Krishna)

IMG_0118

Advertisements

வெறும் நிலாவா, வெள்ளி நிலாவா?

20170907_185847.jpg

சம்மந்தமே இல்லாமல் இந்த படம் இங்கெதற்கு என நினைப்போருக்கு: எனக்கும் தெரியவில்லை. இது நான் எடுத்த புகைப்படம், எனக்குப் பிடித்திருந்தது. அதன் மீது இக் கவிதையை எழுதினேன். அதை மாற்ற மனம் வரவில்லை, எனவே அப்படியே விட்டு விட்டேன். படத்தையோ, கவிதையையோ, இரண்டையும் சேர்த்தோ ரசித்து விடுங்களேன்? நன்றி.

காதல் வளர்ப்போம், மௌனம் கொண்டு

காதல் வளர்ப்போம், மௌனம் கொண்டு

“மௌனமாகப் பேசு,” என்றான் அவன்

“அது எப்படி முடியும்?” கேட்டேன் நான்

என்னைக் கூர்ந்து பார்த்துச் சிரித்தான் அவன்

‘ஓ, கண்கள் உள்ளனவே,’ எனச் சொல்ல யத்தனித்த நான்

சட்டென வாய் மூடி, கண் திறந்தேன்—அவனை நோக்கி அழகாய்ச் சிமிட்ட

மௌனம் அங்கு ஆழமாகப் பேச ஆரம்பித்தது…

காதல் மொழி ஊமைகளுக்கும் சொந்தம் அல்லவா?